குறள்: 241அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்பூரியார் கண்ணும் உள.

Wealth 'mid wealth is wealth 'kindliness';Wealth of goods the vilest too possess

மு.வரதராசன் உரை

பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.

சாலமன் பாப்பையா உரை

செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்தது அருள் என்னும் செல்வமே. பொருட்செல்வம் இழிந்த மனிதரிடமும் உண்டு.

கலைஞர் உரை

கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈடாகாது

Explanation

The wealth of kindness is wealth of wealth, in as much as the wealth of property is possessed by the basest of men

Kural Info

குறள் எண்:241
Category:அறத்துப்பால்
அதிகாரம்:அருளுடைமை
இயல்:துறவறவியல்