குறள்: 243அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்தஇன்னா உலகம் புகல்.

They in whose breast a 'gracious kindliness' resides,See not the gruesome world, where darkness drear abides

மு.வரதராசன் உரை

அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.

சாலமன் பாப்பையா உரை

அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை.

கலைஞர் உரை

அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த துன்ப உலகில் உழலமாட்டார்

Explanation

They will never enter the world of darkness and wretchedness whose minds are the abode of kindness

Kural Info

குறள் எண்:243
Category:அறத்துப்பால்
அதிகாரம்:அருளுடைமை
இயல்:துறவறவியல்