குறள்: 164அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்ஏதம் படுபாக்கு அறிந்து.

The wise through envy break not virtue's laws,Knowing ill-deeds of foul disgrace the cause

மு.வரதராசன் உரை

பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுத‌ை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.

சாலமன் பாப்பையா உரை

பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார்

கலைஞர் உரை

தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்

Explanation

(The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds

Kural Info

குறள் எண்:164
Category:அறத்துப்பால்
அதிகாரம்:அழுக்காறாமை
இயல்:இல்லறவியல்