குறள்: 170அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.

No envious men to large and full felicity attain;No men from envy free have failed a sure increase to gain

மு.வரதராசன் உரை

பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

பொறாமை கொண்டு உயர்ந்தவரும் இல்லை. அது இல்லாதபோது தாழ்ந்தவரும் இல்லை

கலைஞர் உரை

பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை

Explanation

Never have the envious become great; never have those who are free from envy been without greatness

Kural Info

குறள் எண்:170
Category:அறத்துப்பால்
அதிகாரம்:அழுக்காறாமை
இயல்:இல்லறவியல்