குறள்: 41இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்நல்லாற்றின் நின்ற துணை.

The men of household virtue, firm in way of good, sustainThe other orders three that rule professed maintain

மு.வரதராசன் உரை

இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.

சாலமன் பாப்பையா உரை

மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன்.

கலைஞர் உரை

பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்

Explanation

He will be called a (true) householder, who is a firm support to the virtuous of the three orders in

Kural Info

குறள் எண்:41
Category:அறத்துப்பால்
அதிகாரம்:இல்வாழ்க்கை
இயல்:இல்லறவியல்