குறள்: 1அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு.

A, as its first of letters, every speech maintains;The "Primal Deity" is first through all the world's domains

மு.வரதராசன் உரை

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

கலைஞர் உரை

அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை

Explanation

As the letter A is the first of all letters, so the eternal God is first in the world

Kural Info

குறள் எண்:1
Category:அறத்துப்பால்
அதிகாரம்:கடவுள் வாழ்த்து
இயல்:பாயிரவியல்