குறள்: 355எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு.

Whatever thing, of whatsoever kind it be,'Tis wisdom's part in each the very thing to see

மு.வரதராசன் உரை

எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத்தோற்றத்தை மட்டும் கண்டுமங்காமல்) அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வு.

சாலமன் பாப்பையா உரை

எந்தப் பொருளானாலும், அது எப்படிக் காட்சி தந்தாலும், அப்பொருளின் வெளித்தோற்றத்தைக் காணாமல், உள்ளடக்கமாகிய உண்மைப் பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.

கலைஞர் உரை

வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல், அதுபற்றிய உண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும்

Explanation

(True) knowledge is the perception concerning every thing of whatever kind, that that thing is the true thing

Kural Info

குறள் எண்:355
Category:அறத்துப்பால்
அதிகாரம்:மெய்யுணர்தல்
இயல்:துறவறவியல்