குறள்: 356கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்மற்றீண்டு வாரா நெறி.

Who learn, and here the knowledge of the true obtain,Shall find the path that hither cometh not again

மு.வரதராசன் உரை

கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.

சாலமன் பாப்பையா உரை

பெரியவர்களிடம் கற்று, மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.

கலைஞர் உரை

துறவற வாழ்வுக்குத் தகுதியுடையவராகச் செய்திடும் அனைத்தையும் கற்று, உண்மைப் பொருள் உணர்ந்து அதன்படி ஒழுகுபவர், மீண்டும் இல்லற வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள்

Explanation

They, who in this birth have learned to know the True Being, enter the road which returns not into this world

Kural Info

குறள் எண்:356
Category:அறத்துப்பால்
அதிகாரம்:மெய்யுணர்தல்
இயல்:துறவறவியல்