குறள்: 357ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

The mind that knows with certitude what is, and ponders well,Its thoughts on birth again to other life need not to dwell

மு.வரதராசன் உரை

ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா.

சாலமன் பாப்பையா உரை

பெரியவர்களிடம் கேட்டவற்றை மனத்துள் முழுமையாகக் கொண்டு, இடைவிடாமல் மெய்ப்பொருளை உணர்பவருக்குத் ‌திரும்பவும் ஒரு பிறவி இருக்கும் என்று எண்ண வேண்டா.

கலைஞர் உரை

உண்மையை ஆராய்ந்து உறுதியாக உணர்பவர்கள் மீண்டும் பிறப்பு உண்டு எனக் கருத மாட்டார்கள்

Explanation

Let it not be thought that there is another birth for him whose mind having thoroughly considered (all it has been taught) has known the True Being

Kural Info

குறள் எண்:357
Category:அறத்துப்பால்
அதிகாரம்:மெய்யுணர்தல்
இயல்:துறவறவியல்