குறள்: 112செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றிஎச்சத்திற் கேமாப்பு உடைத்து.
The just man's wealth unwasting shall endure,And to his race a lasting joy ensure
நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.
நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்
நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்
The wealth of the man of rectitude will not perish, but will bring happiness also to his posterity
| குறள் எண்: | 112 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | நடுவு நிலைமை |
| இயல்: | இல்லறவியல் |