குறள்: 120வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்பிறவும் தமபோல் செயின்.

As thriving trader is the trader known,Who guards another's interests as his own

மு.வரதராசன் உரை

பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும்.

சாலமன் பாப்பையா உரை

பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும்.

கலைஞர் உரை

பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்

Explanation

The true merchandize of merchants is to guard and do by the things of others as they do by their own

Kural Info

குறள் எண்:120
Category:அறத்துப்பால்
அதிகாரம்:நடுவு நிலைமை
இயல்:இல்லறவியல்