குறள்: 27சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்வகைதெரிவான் கட்டே உலகு.

Taste, light, touch, sound, and smell: who knows the wayOf all the five,- the world submissive owns his sway

மு.வரதராசன் உரை

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.

சாலமன் பாப்பையா உரை

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்.

கலைஞர் உரை

ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்

Explanation

The world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, hearing and smell

Kural Info

குறள் எண்:27
Category:அறத்துப்பால்
அதிகாரம்:நீத்தார் பெருமை
இயல்:பாயிரவியல்