குறள்: 28நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்துமறைமொழி காட்டி விடும்.

The might of men whose word is never vain,The 'secret word' shall to the earth proclaim

மு.வரதராசன் உரை

பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.

சாலமன் பாப்பையா உரை

நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.

கலைஞர் உரை

சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்

Explanation

The hidden words of the men whose words are full of effect, will shew their greatness to the world

Kural Info

குறள் எண்:28
Category:அறத்துப்பால்
அதிகாரம்:நீத்தார் பெருமை
இயல்:பாயிரவியல்