குறள்: 133ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்இழிந்த பிறப்பாய் விடும்.
'Decorum's' true nobility on earth;'Indecorum's' issue is ignoble birth
ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.
தனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தில் பிறந்தது ஆகிவிடும்.
ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும் ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்
Propriety of conduct is true greatness of birth, and impropriety will sink into a mean birth
| குறள் எண்: | 133 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | ஒழுக்கம் உடைமை |
| இயல்: | இல்லறவியல் |