குறள்: 146பகைபாவம் அச்சம் பழியென நான்கும்இகவாவாம் இல்லிறப்பான் கண்.

Who home ivades, from him pass nevermore,Hatred and sin, fear, foul disgrace; these four

மு.வரதராசன் உரை

பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.

சாலமன் பாப்பையா உரை

அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா.

கலைஞர் உரை

பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை

Explanation

Hatred, sin, fear, disgrace; these four will never leave him who goes in to his neighbour's wife

Kural Info

குறள் எண்:146
Category:அறத்துப்பால்
அதிகாரம்:பிறனில் விழையாமை
இயல்:இல்லறவியல்