குறள்: 185அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்புன்மையாற் காணப் படும்.
The slanderous meanness that an absent friend defames,'This man in words owns virtue, not in heart,' proclaims
அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாததன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.
அறத்தைப் பெரிதாகப் பேசும் ஒருவன் மனத்தால் அறவோன் அல்லன் என்பதை அவன் புறம்பேசும் இழிவினைக் கொண்டு கண்டுகொள்ளலாம்.
ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக்கொண்டே அவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்
The emptiness of that man's mind who (merely) praises virtue will be seen from the meanness of reviling another behind his back
| குறள் எண்: | 185 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | புறங்கூறாமை |
| இயல்: | இல்லறவியல் |