குறள்: 188துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்என்னைகொல் ஏதிலார் மாட்டு.

Whose nature bids them faults of closest friends proclaimWhat mercy will they show to other men's good name

மு.வரதராசன் உரை

நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?

சாலமன் பாப்பையா உரை

தன்னோடு நெருக்கமானவர்களின் குற்றத்தையும் அவர் இல்லாத நேரம் பேசும் இயல்புடையவர்கள், அயலார் காரியத்தில் என்னதான் பேசமாட்டார்கள்!

கலைஞர் உரை

நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற குணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச மாட்டார்கள்?

Explanation

What will those not do to strangers whose nature leads them to publish abroad the faults of their intimate friends ?

Kural Info

குறள் எண்:188
Category:அறத்துப்பால்
அதிகாரம்:புறங்கூறாமை
இயல்:இல்லறவியல்