குறள்: 107எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்விழுமந் துடைத்தவர் நட்பு.

Through all seven worlds, in seven-fold birth, Remains in mem'ry of the wiseFriendship of those who wiped on earth, The tears of sorrow from their eyes

மு.வரதராசன் உரை

தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.

சாலமன் பாப்பையா உரை

தம் துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழு பிறப்பிலும் நல்லவர் எண்ணுவர்

கலைஞர் உரை

ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்வதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது

Explanation

(The wise) will remember throughout their seven-fold births the love of those who have wiped away their affliction

Kural Info

குறள் எண்:107
Category:அறத்துப்பால்
அதிகாரம்:செய்ந்நன்றியறிதல்
இயல்:இல்லறவியல்