குறள்: 110எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு.

Who every good have killed, may yet destruction flee;Who 'benefit' has killed, that man shall ne'er 'scape free

மு.வரதராசன் உரை

எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

சாலமன் பாப்பையா உரை

எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை

கலைஞர் உரை

எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை

Explanation

He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit

Kural Info

குறள் எண்:110
Category:அறத்துப்பால்
அதிகாரம்:செய்ந்நன்றியறிதல்
இயல்:இல்லறவியல்