குறள்: 1272கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்பெண்நிறைந்த நீர்மை பெரிது.

The simple one whose beauty fills mine eye, whose shoulders curveLike bambu stem, hath all a woman's modest sweet reserve

மு.வரதராசன் உரை

கண் நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் உடைய என் காதலிக்குப் பெண்மைத்தன்மை நிறைந்து விளங்கும் இயல்பு மிகுதியாக உள்ளது.

சாலமன் பாப்பையா உரை

என் கண் நிறைந்த அழகையும், மூங்கிலைப் போன்ற தோளையும் உடைய இப்பேதைக்குப் பெண்கள் எல்லாரிடமும் இருக்கும் குண மேன்மையிலும் அதிக மேன்மை இருக்கிறது.

கலைஞர் உரை

கண்நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் கொண்ட என் காதலிக்குப் பெண்மைப் பண்பு நிறைந்திருப்பதே பேரழகாகும்

Explanation

Unusually great is the female simplicity of your maid whose beauty fills my eyes and whose shoulders resemble the bamboo

Kural Info

குறள் எண்:1272
Category:காமத்துப்பால்
அதிகாரம்:குறிப்பறிவுறுத்தல்
இயல்:கற்பியல்