குறள்: 1274முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதைநகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.
As fragrance in the opening bud, some secret liesConcealed in budding smile of this dear damsel's eyes
அரும்பு தோன்றும்போது அடங்கியிருக்கும் மணத்தைப் போல், காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் அடங்கி இருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது.
மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.
மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது
There is something in the unmatured smile of this maid like the fragrance that is contained in an unblossomed bud
| குறள் எண்: | 1274 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | குறிப்பறிவுறுத்தல் |
| இயல்: | கற்பியல் |