குறள்: 1118மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்காதலை வாழி மத஧.

Farewell, O moon! If that thine orb could shineBright as her face, thou shouldst be love of mine

மு.வரதராசன் உரை

திங்களே! இம் மாதரின் முகத்தைப் போல உண்ணால் ஒளி வீச முடியுமானால், நீயும் இவள் போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.

சாலமன் பாப்பையா உரை

நிலவே! நீ வாழ்க! என் மனைவியின் முகம்போல் நான் மகிழும்படி ஒளிவீசுவாய் என்றால் நீயும் என் காதலைப் பெறுவாய்.

கலைஞர் உரை

முழுமதியே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில், என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக

Explanation

If you can indeed shine like the face of women, flourish, O moon, for then would you be worth loving ?

Kural Info

குறள் எண்:1118
Category:காமத்துப்பால்
அதிகாரம்:நலம் புனைந்து உரைத்தல்
இயல்:களவியல்