குறள்: 1241நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்எவ்வநோய் தீர்க்கும் மருந்து.

My heart, canst thou not thinking of some med'cine tell,Not any one, to drive away this grief incurable

மு.வரதராசன் உரை

நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ?

சாலமன் பாப்பையா உரை

நெஞ்சே! எதனாலும் தீராத என் நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை எண்ணிப் பார்த்துச் சொல்லமாட்டாயா?

கலைஞர் உரை

எந்த மருந்தினாலும் தீராத என் காதல் நோய் தீர்ந்திட ஏதாவது ஒரு மருந்தை நினைத்துப் பார்த்து, நெஞ்சே! உன்னால் சொல்ல முடியுமா?

Explanation

O my soul, will you not think and tell me some medicine be it what it may, that can cure this incurable malady?

Kural Info

குறள் எண்:1241
Category:காமத்துப்பால்
அதிகாரம்:நெஞ்சொடு கிளத்தல்
இயல்:கற்பியல்