குறள்: 1242காதல் அவரிலர் ஆகநீ நோவதுபேதைமை வாழியென் நெஞ்சு.
Since he loves not, thy smartIs folly, fare thee well my heart
என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!
என் நெஞ்சே நீ வாழ்ந்து போ; அவர் நம்மீது அன்பு இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவர் வரவை எண்ணி வருந்துவது மூடத்தனமே.
அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க
Is folly, fare thee well my heart!
| குறள் எண்: | 1242 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | நெஞ்சொடு கிளத்தல் |
| இயல்: | கற்பியல் |