குறள்: 1249உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீயாருழைச் சேறியென் நெஞ்சு.
My heart! my lover lives within my mind;Roaming, whom dost thou think to find
என் நெஞ்சே! காதலர் உன் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?
என் நெஞ்சே! நம் அன்பர் நம் மனத்திற்குள்ளேயே இருக்க, நீ அவரைத் தேடி எவரிடம் போகிறாய்?
உள்ளத்திலேயே காதலர் குடி கொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்?
O my soul! to whom would you repair, while the dear one is within yourself?
| குறள் எண்: | 1249 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | நெஞ்சொடு கிளத்தல் |
| இயல்: | கற்பியல் |