குறள்: 1250துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமாஇன்னும் இழத்தும் கவின்.
If I should keep in mind the man who utterly renounces me,My soul must suffer further loss of dignity
நம்மோடு பொருந்தி இருக்காமல் கைவிட்டுச சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம்.
நம்மைக் கலவாமல் பிரிந்து போனவரை நாம் நம் மனத்திற்குள்ளேயே கொண்டிருப்பதால் முன்பு இழந்த புற அழகை மட்டுமே அன்று இருக்கும் அக அழகையும் இழக்கப் போகிறோம்.
சேராமல் பிரிந்து சென்ற காதலரைச் சிந்தையில் வைத்திருப்பதால் மேலும் மேனியெழில் இழந்து மெலிந்து அழிய வேண்டியுள்ளது
If I retain in my heart him who has left me without befriending me, I shall lose even the (inward) beauty that remains
| குறள் எண்: | 1250 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | நெஞ்சொடு கிளத்தல் |
| இயல்: | கற்பியல் |