குறள்: 1202எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்நினைப்ப வருவதொன்று ஏல்.

How great is love! Behold its sweetness past belief!Think on the lover, and the spirit knows no grief

மு.வரதராசன் உரை

தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை

நாம் விரும்புபவரைப் பிரிவிலும் நினைத்தால் பிரிவுத் துன்பம் வராது. அதனால் என்ன ஆனாலும் சரி, காதல் இனியதுதான்.

கலைஞர் உரை

விரும்பி இணைந்த காதலரை நினைத்தலால், பிரிவின் போது வரக்கூடிய துன்பம் வருவதில்லை எனவே எந்த வகையிலும் காதல் இனிதேயாகும்

Explanation

Even to think of one's beloved gives one no pain Sexuality, in any degree, is always delightful

Kural Info

குறள் எண்:1202
Category:காமத்துப்பால்
அதிகாரம்:நினைந்தவர் புலம்பல்
இயல்:கற்பியல்