குறள்: 1203நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்சினைப்பது போன்று கெடும்.

A fit of sneezing threatened, but it passed away;He seemed to think of me, but do his fancies stray

மு.வரதராசன் உரை

தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?

சாலமன் பாப்பையா உரை

எனக்குத் தும்மல் வருவது போல் வந்து அடங்கி விடுகிறது. அவர் என்னை நினைக்கத் தொடங்கி, நினைக்காமல் விடுவாரோ?

கலைஞர் உரை

வருவது போலிருந்து வராமல் நின்று விடுகிறதே தும்மல்; அதுபோலவே என் காதலரும் என்னை நினைப்பது போலிருந்து, நினைக்காது விடுகின்றாரோ?

Explanation

I feel as if I am going to sneeze but do not, and (therefore) my beloved is about to think (of me) but does not

Kural Info

குறள் எண்:1203
Category:காமத்துப்பால்
அதிகாரம்:நினைந்தவர் புலம்பல்
இயல்:கற்பியல்