குறள்: 1204யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்துஓஒ உளரே அவர்.
Have I a place within his heart!From mine, alas! he never doth depart
எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! ( அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோமோ?
என் நெஞ்சத்தில் அவர் எப்போதும் இருக்கிறார். அவர் நெஞ்சத்தில் நானும் இருப்பேனா?
என் நெஞ்சைவிட்டு நீங்காமல் என் காதலர் இருப்பது போல, அவர் நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா?
He continues to abide in my soul, do I likewise abide in his ?
| குறள் எண்: | 1204 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | நினைந்தவர் புலம்பல் |
| இயல்: | கற்பியல் |