குறள்: 1205தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்எம்நெஞ்சத்து ஓவா வரல்.

Me from his heart he jealously excludes:Hath he no shame who ceaseless on my heart intrudes

மு.வரதராசன் உரை

தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வரவதைப் பற்றி நாணமாட்டாரோ?

சாலமன் பாப்பையா உரை

தம் நெஞ்சத்தில் என்னை விலக்கிவிட்ட அவர், என் நெஞ்சத்தில் மட்டும் ஓயாமல் வருவதற்கு வெட்கப் படமாட்டாரோ?

கலைஞர் உரை

அவருடைய நெஞ்சில் எமக்கு இடம் தராமல் இருப்பவர்; எம் நெஞ்சில் மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக வெட்கப்படமாட்டார் போலும்

Explanation

He who has imprisoned me in his soul, is he ashamed to enter incessantly into mine

Kural Info

குறள் எண்:1205
Category:காமத்துப்பால்
அதிகாரம்:நினைந்தவர் புலம்பல்
இயல்:கற்பியல்