குறள்: 1207மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்உள்ளினும் உள்ளம் சுடும்.
If I remembered not what were I then? And yet,The fiery smart of what my spirit knows not to forget
( காதலரை ) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ?
அந்த நாள்களின் நினைவுகளை மறவாமல் நினைத்தாலும் என் நெஞ்சு சுடும்; அப்படி இருக்க மறந்தால் வாழ்வது எப்படி?
மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! பினைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ?
I have never forgotten (the pleasure); even to think of it burns my soul; could I live, if I should ever forget it ?
| குறள் எண்: | 1207 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | நினைந்தவர் புலம்பல் |
| இயல்: | கற்பியல் |