குறள்: 1208எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோகாதலர் செய்யும் சிறப்பு.

My frequent thought no wrath excites It is not so?This honour doth my love on me bestow

மு.வரதராசன் உரை

காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினங்கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ!

சாலமன் பாப்பையா உரை

அவரை நான் எப்படி எண்ணினாலும் கோபப்படமாட்டார்; அன்புள்ள அவர் எனக்குத் தரும் இன்பம் அத்தகையது அன்றோ!

கலைஞர் உரை

எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அதற்காகக் காதலர் என் மீது சினம் கொள்ளமாட்டார். அவர் எனக்குச் செய்யும் பெரும் உதவி அதுவல்லவா?

Explanation

He will not be angry however much I may think of him; is it not so much the delight my beloved

Kural Info

குறள் எண்:1208
Category:காமத்துப்பால்
அதிகாரம்:நினைந்தவர் புலம்பல்
இயல்:கற்பியல்