குறள்: 1209விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்அளியின்மை ஆற்ற நினைந்து.
Dear life departs, when his ungracious deeds I ponder o'er,Who said erewhile, 'We're one for evermore'
நாம் இருவரும் வேறு அல்லேம் என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைத்து என் இனிய உயிர் அழிகின்றது.
நம் உயிர் வேறு அல்ல; ஒன்றே என்று முன்பு சொன்ன அவரின் இப்போதைய கருணையற்ற தன்மையை அதிகம் எண்ணி, என் உயிர் போய்க்கொண்டே இருக்கிறது.
``நாம் ஒருவரே; வேறு வேறு அல்லர்'' எனக்கூறிய காதலர் இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்து வருந்துவதால் என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறது
My precious life is wasting away by thinking too much on the cruelty of him who said we were not different
| குறள் எண்: | 1209 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | நினைந்தவர் புலம்பல் |
| இயல்: | கற்பியல் |