குறள்: 1181நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்பண்பியார்க்கு உரைக்கோ பிற.
I willed my lover absent should remain;Of pining's sickly hue to whom shall I complain
விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்; பிரிந்தபின் பசலை உற்ற என் தன்மையை வேறு யார்க்குச் சென்று சொல்வேன்?
என்னை விரும்பிய என்னவர் பிரியச் சம்மதித்த நான், அவர் பிரிவைத் தாங்காமல் பசலை கொண்ட என் மேனியின் இயல்பை யாரிடம் போய்ச் சொல்வேன்?
என்னைப் பிரிந்து செல்வதற்கு என் காதலர்க்கு ஒப்புதல் அளித்துவிட்டேன்; ஆனால், இப்போது பிரிவுத் துன்பத்தால் என்னுடலில் பசலை படர்வதை, யாரிடம் போய்ச் சொல்வேன்?
I who (then) consented to the absence of my loving lord, to whom can I (now) relate the fact of my having turned sallow
| குறள் எண்: | 1181 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | பசப்புறு பருவரல் |
| இயல்: | கற்பியல் |