குறள்: 1185உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்மேனி பசப்பூர் வது.

My lover there went forth to roam;This pallor of my frame usurps his place at home

மு.வரதராசன் உரை

அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ பார்! என்னுடைய மேனியில் பசலை நிறம் வந்து படர்கிறது.

சாலமன் பாப்பையா உரை

முன்பும்கூட, அந்தப் பக்கம் என் அன்பர் போயிருப்பார்; இந்தப் பக்கம் என் மேனி பசலை கொண்டு விடும். முன்பே அப்படி என்றால் இப்போது எப்படி இருக்கும்?

கலைஞர் உரை

என்னைப் பிரிந்து காதலர் சிறிது தொலைவுகூடச் செல்லவில்லை; அதற்குள்ளாக என் மேனியில் படர்ந்து விட்டதே பசலை நிறம்

Explanation

Just as my lover departed then, did not sallowness spread here on my person ?

Kural Info

குறள் எண்:1185
Category:காமத்துப்பால்
அதிகாரம்:பசப்புறு பருவரல்
இயல்:கற்பியல்