குறள்: 1186விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

As darkness waits till lamp expires, to fill the place,This pallor waits till I enjoy no more my lord's embrace

மு.வரதராசன் உரை

விளக்கினுடைய மறைவைப் பார்த்துக் காத்திருக்கின்ற இருளைப் போலவே, தலைவனுடைய தழுவுதலின் ‌சோர்வைப் பார்த்துக் காத்திருக்கினறது.

சாலமன் பாப்பையா உரை

விளக்கு மெலிவதைப் பார்த்து நெருங்கும் இருட்டைப் போல என்னவரின் தழுவல் நெகிழ்வதைப் பார்த்துக் காத்திருந்த பசலை வரும்.

கலைஞர் உரை

விளக்கின் ஒளிகுறையும் சமயம் பார்த்துப் பரவிடும் இருளைப்போல, இறுகத் தழுவிய காதலன்பிடி, சற்றுத் தளரும்போது காதலியின் உடலில் பசலைநிறம் படர்ந்து விடுகிறது

Explanation

Just as darkness waits for the failing light; so does sallowness wait for the laxity of my husband's intercourse

Kural Info

குறள் எண்:1186
Category:காமத்துப்பால்
அதிகாரம்:பசப்புறு பருவரல்
இயல்:கற்பியல்