குறள்: 1189பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்நன்னிலையர் ஆவர் எனின்.

Well let my frame, as now, be sicklied o'er with pain,If he who won my heart's consent, in good estate remain

மு.வரதராசன் உரை

பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையுடையவர் ஆவார் என்றால், என்னுடைய மேனி உள்ளபடி பசலை நிறம் அடைவதாக.

சாலமன் பாப்பையா உரை

இந்தப் பிரிவிற்கு நான் சம்மதிக்கும்படி செய்து பிரிந்தவர்தாம் நல்லவர் என்றால், என் மேனி மேலும் பசலை அடைந்து விட்டுப் போகட்டும்!

கலைஞர் உரை

பிரிந்து சென்றிட என்னை ஒப்புக் கொள்ளுமாறு செய்த காதலர் நலமாக இருப்பார் என்றால் என்னுடல் பசலை படர்ந்தே விளங்கிடுமாக!

Explanation

If he is clear of guilt who has conciliated me (to his departure) let my body suffer its due and turn sallow

Kural Info

குறள் எண்:1189
Category:காமத்துப்பால்
அதிகாரம்:பசப்புறு பருவரல்
இயல்:கற்பியல்