குறள்: 1161மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்குஊற்றுநீர் போல மிகும்.

I would my pain conceal, but see! it surging swells,As streams to those that draw from ever-springing wells

மு.வரதராசன் உரை

இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுவது போல் மிகுகின்றது.

சாலமன் பாப்பையா உரை

என் காதல் துன்பத்தை மற்றவர் அறிந்துவிடக்கூடாது என்று மறைக்கவே செய்தேன்; ஆனாலும் இறைக்க இறைக்க ஊற்றுநீர் பெருகுவது போல மறைக்க மறைக்க என் துன்பமும் பெருகவே செய்கிறது.

கலைஞர் உரை

இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீர் போல, பிறர் அறியாமல் மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகும்

Explanation

I would hide this pain from others; but it (only) swells like a spring to those who drain it

Kural Info

குறள் எண்:1161
Category:காமத்துப்பால்
அதிகாரம்:படர்மெலிந் திரங்கல்
இயல்:கற்பியல்