குறள்: 1164காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்ஏமப் புணைமன்னும் இல்.

A sea of love, 'tis true, I see stretched out before,But not the trusty bark that wafts to yonder shore

மு.வரதராசன் உரை

காமநோயாகிய கடல் இருக்கின்றது. ஆனால் அதை நீந்திக்கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான ‌தோணியோ இல்லை.

சாலமன் பாப்பையா உரை

காதல் துன்பம், வெட்கம், இவ்விரண்டிலும் என்னுள் மிகுந்திருப்பது காதல் துன்பம் என்னும் கடலே; அதைக் கடக்கப் பாதுகாப்பான படகுதான் இல்லை.

கலைஞர் உரை

காதல் கடல்போலச் சூழ்ந்துகொண்டு வருத்துகிறது ஆனால் அதை நீந்திக் கடந்து செல்லப் பாதுகாப்பான தோணிதான் இல்லை

Explanation

There is indeed a flood of lust; but there is no raft of safety to cross it with

Kural Info

குறள் எண்:1164
Category:காமத்துப்பால்
அதிகாரம்:படர்மெலிந் திரங்கல்
இயல்:கற்பியல்