குறள்: 1166இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்துன்பம் அதனிற் பெரிது.

A happy love 's sea of joy; but mightier sorrows rollFrom unpropitious love athwart the troubled soul

மு.வரதராசன் உரை

காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது; அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.

சாலமன் பாப்பையா உரை

காதல் மகிழ்ச்சி கடல்போலப் பெரிது; ஆனால் பிரிவினால் அது துன்பம் செய்யத் தொடங்கிவிட்டால் அத்துன்பம் கடலைக் காட்டிலும் பெரிது.

கலைஞர் உரை

காதல் இன்பம் கடல் போன்றது காதலர் பிரிவு ஏற்படுத்தும் துன்பமோ, கடலைவிடப் பெரியது

Explanation

The pleasure of lust is (as great as) the sea; but the pain of lust is far greater

Kural Info

குறள் எண்:1166
Category:காமத்துப்பால்
அதிகாரம்:படர்மெலிந் திரங்கல்
இயல்:கற்பியல்