குறள்: 1169> கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்நெடிய கழியும் இரா.

More cruel than the cruelty of him, the cruel one,In these sad times are lengthening hours of night I watch alone

மு.வரதராசன் உரை

( பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையை விடத் தாம் கொடியவை.

சாலமன் பாப்பையா உரை

இப்போதெல்லாம் இரவுகள் கழிவதற்கு நெடும்பொழுது ஆகிறது; என்னைப் பிரிந்து போன என் கணவரின் கொடுமையிலும் இவை மிகக் கொடுமையாக இருக்கின்றன.

கலைஞர் உரை

இந்த இரவுகள் நீண்டுகொண்டே போவதுபோல் தோன்றும் கொடுமை இருக்கிறதே அது காதலரின் பிரிவால் ஏற்படும் கொடுமையைவிடப் பெரிதாக உள்ளது

Explanation

The long nights of these days are far more cruel than the heartless one who is torturing me

Kural Info

குறள் எண்:1169
Category:காமத்துப்பால்
அதிகாரம்:படர்மெலிந் திரங்கல்
இயல்:கற்பியல்