குறள்: 1153அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்பிரிவோ ரிடத்துண்மை யான்.

To trust henceforth is hard, if ever he depart,E'en he, who knows his promise and my breaking heart

மு.வரதராசன் உரை

அறிவுடைய காதலரிடத்தும் பிரிவு ஒரு காலத்தில் உள்ள படியால் அவர் பிரியேன் என்று சொல்லும் உறுதி மொழியை நம்பித் தெளிவது அரிது.

சாலமன் பாப்பையா உரை

எல்லாம் அறியும் ஆற்றல் உடைய அவரும் ஒருநேரம் பிரிவார் என்றால், என்மீது அவர் கொண்டிருக்கும் அன்பை அறிந்து கொள்ள முடியவில்லை.

கலைஞர் உரை

பிரிவுத் துன்பத்தை அறிந்துள்ள காதலரும் நம்மைப் பிரிந்த செல்ல நேரிடுவதால்; ``பிரிந்திடேன்'' என அவர் கூறவதை உறுதி செய்திட இயலாது

Explanation

As even the lover who understands (everything) may at times depart, confidence is hardly possible

Kural Info

குறள் எண்:1153
Category:காமத்துப்பால்
அதிகாரம்:பிரிவு ஆற்றாமை
இயல்:களவியல்