குறள்: 1155ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்நீங்கின் அரிதால் புணர்வு.

If you would guard my life, from going him restrainWho fills my life! If he depart, hardly we meet again

மு.வரதராசன் உரை

காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும், அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது.

சாலமன் பாப்பையா உரை

என் உயிரைக் காக்க எண்ணினால் அதைக் காப்பதற்கு உரிய அவர், என்னை விட்டுப் பிரிவதைத் தவிர்க்க வேண்டும். மீறிப் பிரிந்தால் நான் இனி அவரைச் சேர்வது அரிது.

கலைஞர் உரை

காதலர் பிரிந்து சென்றால் மீண்டும் கூடுதல் எளிதல்ல என்பதால், அவர் பிரிந்து செல்லாமல் முதலியேயே காத்துக் கொள்ள வேண்டும்

Explanation

If you would save (my life), delay the departure of my destined (husband); for if he departs, intercourse will become impossible

Kural Info

குறள் எண்:1155
Category:காமத்துப்பால்
அதிகாரம்:பிரிவு ஆற்றாமை
இயல்:களவியல்