குறள்: 1158இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்இன்னாது இனியார்ப் பிரிவு.

'Tis sad to sojourn in the town where no kind kinsmen dwell;'Tis sadder still to bid a friend beloved farewell

மு.வரதராசன் உரை

இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது, இனியக் காதலரின் பிரிவு அதை விடத் துன்பமானது.

சாலமன் பாப்பையா உரை

உறவானவர் இல்லாத ஊரிலே வாழ்வது கொடுமை; என் உயிர்க்கு இனியவரைப் பிரிவது அதைவிடக் கொடுமை.

கலைஞர் உரை

நம்மை உணர்ந்து அன்பு காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது; அதைக் காட்டிலும் துன்பமானது இனிய காதலரைப் பிரிந்து வாழ்வது

Explanation

Painful is it to live in a friendless town; but far more painful is it to part from one's lover

Kural Info

குறள் எண்:1158
Category:காமத்துப்பால்
அதிகாரம்:பிரிவு ஆற்றாமை
இயல்:களவியல்