குறள்: 1159தொடிற்சுடின் அல்லது காமநோய் போலவிடிற்சுடல் ஆற்றுமோ தீ.
Fire burns the hands that touch; but smart of loveWill burn in hearts that far away remove
நெருப்பு, தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காமநோய் போல் தன்னை விட்டு நீங்கிய பொழுது சுடவல்லதாகுமோ.
தீ தன்னைத் தொட்டவரைத்தான் சுடும்; காதல் நோயைப் போல அதை விட்டு அகன்றாலும் சுடுமோ?
ஒருவரையொருவர் காணாமலும் தொடாமலும் பிரிந்திருக்கும் போது காதல் நோய் உடலையும் உள்ளத்தையும் சுடுவது போன்ற நிலை நெருப்புக்கு இல்லை; நெருப்பு தொட்டால் சுடும்; இது, பிரிவில் சுடுகிறதே!
Fire burns when touched; but, like the sickness of love, can it also burn when removed ?
| குறள் எண்: | 1159 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | பிரிவு ஆற்றாமை |
| இயல்: | களவியல் |