குறள்: 1312ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மைநீடுவாழ் கென்பாக் கறிந்து.

One day we silent sulked; he sneezed: The reason well I knew;He thought that I, to speak well pleased, Would say, 'Long life to you!'

மு.வரதராசன் உரை

காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார்.

சாலமன் பாப்பையா உரை

நான் அவரோடு ஊடிப் பேசாமல் இருந்தேன்; நீடு வாழ்க, என்று சொல்லி அவரோடு பேசுவேன். என்று எண்ணி, வேண்டும் என்றே தும்மினார்! நானா பேசுவேன்? (ஆனாலும் வாழ்த்தினாள்)

கலைஞர் உரை

ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து அவரை ``நீடுவாழ்க'' என வாழ்த்துவேன் என்று நினைத்து

Explanation

When I continued to be sulky he sneezed and thought I would (then) wish him a long life

Kural Info

குறள் எண்:1312
Category:காமத்துப்பால்
அதிகாரம்:புலவி நுணுக்கம்
இயல்:கற்பியல்