குறள்: 1316உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்புல்லாள் புலத்தக் கனள்.

'Each day I called to mind your charms,' 'O, then, you had forgot,'She cried, and then her opened arms, Forthwith embraced me not

மு.வரதராசன் உரை

நினைத்தேன் என்று கூறி‌னேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று என்னைத் தழுவாமல் ஊடினாள்.

சாலமன் பாப்பையா உரை

எப்போதும் உன்னைத்தான் எண்ணினேன் என்றேன். சில சமயம் மறந்து ஒரு சமயம் நினைத்ததாக எண்ணி அப்படியானால் என்னை இடையில் மறந்திருக்கிறீர் என்று சொல்லித் தழுவத் தொடங்கியவள், விட்டுவிட்டு ஊடத் தொடங்கினாள்.

கலைஞர் உரை

``உன்னை நினைத்தேன்'' என்று காதலியிடம் சொன்னதுதான் தாமதம்;'' அப்படியானால் நீர் என்னை மறந்திருந்தால்தானே நினைத்திருக்க முடியும்?'' எனக்கேட்டு ``ஏன் மறந்தீர்?'' என்று அவள் ஊடல் கொண்டாள்

Explanation

When I said I had remembered her, she said I had forgotten her and relaxing her embrace, began to feign dislike

Kural Info

குறள் எண்:1316
Category:காமத்துப்பால்
அதிகாரம்:புலவி நுணுக்கம்
இயல்:கற்பியல்