குறள்: 1196ஒருதலையான் இன்னாது காமம்காப் போலஇருதலை யானும் இனிது.

Love on one side is bad; like balanced loadBy porter borne, love on both sides is good

மு.வரதராசன் உரை

காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.

சாலமன் பாப்பையா உரை

ஆண், பெண் என்னும் இரு பக்கத்தில் ஒரு பக்கம் மட்டுமே காதல் இருந்தால் அது கொடுமை காவடியின் பாரத்தைப் போல இருபக்கமும் இருந்தால்தான் இனிது.

கலைஞர் உரை

காவடித் தண்டின் இரண்டு பக்கங்களும் ஒரே அளவு கனமாக இருப்பதுபோல், காதலும் ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்; ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை; துயரமும் உருவாகும்

Explanation

Lust, like the weight of the KAVADI, pains if it lies in one end only but pleases if it is in both

Kural Info

குறள் எண்:1196
Category:காமத்துப்பால்
அதிகாரம்:தனிப்படர் மிகுதி
இயல்:கற்பியல்