குறள்: 1199நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டுஇசையும் இனிய செவிக்கு.
Though he my heart desires no grace accords to me,Yet every accent of his voice is melody
யான் விரும்பிய காதலர் மீண்டு வந்து அன்பு செய்யமாட்டார் என்றாலும், அவரைப் பற்றிய புகழைக் கேட்பதும் என் செவிக்கு இன்பமாக இருக்கின்றது.
நான் காதலிக்கும் என் கணவர் என்மீது அன்பற்றவர்தாம் என்றாலும், அவரிடம் இருந்து வரும் எந்தச் சொல்லும் என் செவிக்கு இனிமையானதே.
என் அன்புக்குரியவர் என்னிடம் அன்பு காட்டாதவராகப் பிரிந்து இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் உரை என் செவிக்குச் செந்தேனாகும்
Though my beloved bestows no love on one, still are his words sweet to my ears
| குறள் எண்: | 1199 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | தனிப்படர் மிகுதி |
| இயல்: | கற்பியல் |