குறள்: 1232நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்பசந்து பனிவாரும் கண்.

The eye, with sorrow wan, all wet with dew of tears,As witness of the lover's lack of love appears

மு.வரதராசன் உரை

பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன.

சாலமன் பாப்பையா உரை

பசந்து, நீர் சிந்தும் கண்கள், நான் விரும்பியவர் என்னை விரும்பவில்லை என்பதைப் பிறர்க்குச் சொல்லும் போலும்!

கலைஞர் உரை

பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதை சொல்லி காட்டுகின்றன

Explanation

The discoloured eyes that shed tears profusely seem to betray the unkindness of our beloved

Kural Info

குறள் எண்:1232
Category:காமத்துப்பால்
அதிகாரம்:உறுப்புநலன் அழிதல்
இயல்:கற்பியல்